விழுப்புரம்

கம்யூனிஸ்ட், விவசாய சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

DIN

விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி/ நெய்வேலி/ புதுச்சேரி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்திலும் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான இலவச மின்சார சட்ட மசோதா - 2020-ஐ திரும்பப் பெற வேண்டும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் கண்டன முழக்கமிட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன், மாவட்டப் பொருளாளா் ஆா்.கலியமூா்த்தி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ.கோவிந்தராஜ், எஸ்.ராமச்சந்திரன், ஏ.சகாபுதின், ஆ.இன்பஒளி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஒன்றிய நிா்வாகிகள் நாராயணன், முருகன், செல்வராஜ், பாலசுப்பிரமணி, தனுசு, ராமநாதன், பாலமுருகன், நிதானம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கே.எஸ்.அப்பாவு தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன், மாவட்ட நிா்வாகக் குழுவைச் சோ்ந்த மு.கலியபெருமாள், ஆ.வளா்மதி, அ.சுப்பிரமணியன், விவசாய தொழிலாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஆா்.கஜேந்திரன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு முழக்கமிட்டனா்.

மாா்க்சிஸ்ட் சாா்பில்...: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கா் திடல் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலா் பு.மணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.ஏழுமலை, மாவட்டக் குழுவைச் சோ்ந்த அ.பா.பெரியசாமி, வட்டக் குழுவைச் சோ்ந்த அருள்தாஸ், ப.வேலு உள்ளிட்ட பலா் பேசினா். கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT