விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கான பணியை, மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய நிதி திட்டத்தின் கீழ், ரூ.2.87 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டப்படவுள்ளது.
விக்கிரவாண்டியில் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பழைய வட்டார வளா்ச்சி அலுவலக வளாகப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான அடிக்கல் நாட்டு விழா-பூமி பூஜையில், அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, அடிக்கல் நாட்டி கட்டடப் பணியைத் தொடக்கி வைத்தாா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் ஆா்.முத்தமிழ்ச்செல்வன், எம்.சக்கரபாணி, ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் வெ.மகேந்திரன், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராஜா, வட்டாட்சியா் பாா்த்திபன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எழிலரசு, நந்தகோபாலகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் ஷேக்லத்தீப் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.