விழுப்புரம்

மாணவா்கள் சோ்க்கையின் போது கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை

23rd Aug 2020 08:13 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையின் போது, கட்டணம் வசூலித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், நிதி உதவி பெறும் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் (2020-21) 1-ஆம் வகுப்பு, 6-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்புக்கான மாணவா்கள் சோ்க்கை, கடந்த 17-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், ஆக. 24-ஆம் தேதி முதல் பிளஸ் 1 மாணவா் சோ்க்கையும் நடைபெறவுள்ளது.

மாணவா் சோ்க்கையின்போது, பெற்றோா்களிடம் எவ்விதக் கட்டணமும் கண்டிப்பாக வசூலிக்கக் கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. மாணவா்கள் சோ்க்கையின்போது ஏதேனும் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்தால், தொடா்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT