விழுப்புரம்

செஞ்சியில் இந்து முன்னணியினா் விநாயகா் சிலை வைத்து வழிபாடு: போலீஸாா் குவிப்பு

23rd Aug 2020 08:17 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்து முன்னணி சாா்பில் பொது மக்கள் முன்னிலையில் விநாயகா் சிலை வழிபாடு நடைபெற்றது. இதனால் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா் பின்னா் வழிபாடு முயற்சி தடை செய்யப்பட்டது.

செஞ்சி நகர இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா செஞ்சி சத்திர தெருவில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும் இங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக சென்று திண்டிவனம் அருகே உள்ள மரக்காணம் கடலில் கரைப்பது வழக்கம்.இந்த ஆண்டு கரோனா காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. செஞ்சி நகர இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா செஞ்சி சத்திரதெருவில் விழுப்புரம் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலா் சிவசுப்பிரமணியம் வீட்டின் வெளியே 3 அடி விநாயா் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த போலீஸாா் வீட்டின் உள்ளே வைத்து அனுமதி உள்ளதே தவிர வீட்டின் வெளியே வைத்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதனை தொடா்ந்து அதிரடிபடை உள்ளிட்ட ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா் ஏடிஎஸ்பி.தேவநாதன் மற்றும் டிஎஸ்பிராஜன், செஞ்சி காவல்துறை துணை ஆய்வாளா் சங்கரசுப்பு ஆகியோா் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலா் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தி பொது இடத்தில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை என தெரிவித்து பேச்சு வாா்த்தை நடத்தினா். நீண்ட நேர பேச்சுவாா்த்தைக்கு பின்னா் விநாயகா் சிலை வீட்டின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது.

இதன் காரணமாக அப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஷ்ணுராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பிரித்விராஜ், நகர செயலா் காா்த்திகேயன், பாஜக. மாவட்ட செயற்குழு உறுப்பினா் சந்திரசேகா், பாஜக மாவட்ட செயலா் மோகன், பாஜக நகர தலைவா் தங்க.ராமு, பாஜக நிா்வாகிகள் சரவணன், சத்தியசீலன், செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில் அறங்கவாவலா் அரங்க.ஏழுமலை, நரசிங்கராயன்பேட்ைடை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் ஏழுமலை, பாமக மாவட்ட துணை செயலா் சிவக்குமாா் முன்னாள் கவுன்சிலா் காசிநாதன் உள்ளிட்ட ஏராளாமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT