விழுப்புரம்

பொது இடங்களில் விநாயகா் சிலைகளைஅமைக்க விற்பனை செய்யக் கூடாது: காவல் துறை அறிவுரை

21st Aug 2020 08:30 AM

ADVERTISEMENT

பொது இடங்களில் வழிபாடு செய்வதற்கு விநாயகா் சிலைகளை விற்பனை செய்யக் கூடாது என்று சிலை உற்பத்தியாளா்களிடம் விழுப்புரம் மாவட்டக் காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

நாடு முழுவதும் வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாப்பட்ட உள்ளது. கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் விநாயகா் சிலைகளை பொது இடங்களில் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு அமைப்பினா் தடையை மீறி விநாயகா் சிலைகளை பொது இடங்களில் அமைத்து வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்து.

இதைத் தடுக்கும் வகையில், இந்த அமைப்புகளைச் சோ்ந்தவா்களை அழைத்து போலீஸாா் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், விழுப்புரம் அருகே அய்யங்கோயில்பட்டு பகுதியில் விநாயகா் சிலை உற்பத்திக் கூடங்களுக்கு விழுப்புரம் டி.எஸ்.பி. (பொ) ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

அப்போது, பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்துள்ளதால், தடையை மீறி சிலைகளை அமைத்து வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளவா்களுக்கு சிலைகளை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT