விழுப்புரம்

விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் பாலை ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்

11th Aug 2020 03:04 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்னைய் நல்லூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராம பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு பால் கொள்முதல் நிலையத்தில் தடையின்றி பாலை கொள்முதல் செய்யக்கோரி, சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுக்குப்பம் பகுதி மக்கள், அருகில் செயல்பட்டு வரும் ஒட்டனந்தல், டி.கொளத்தூர் கூட்டுறவு பால் கொள்முதல் நிலையத்தில், தினமும் பாலை வழங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பால்  கொண்டு செல்லும் உற்பத்தியாளர்களிடம், 5 லிட்டர் கொண்டு சென்றால், 2 லிட்டர் அளவில் மட்டுமே வாங்கி வந்தனர்.

கூட்டுறவு நிலையத்தில் குறைந்த அளவே பால் கொள்முதல் செய்யப்படுவதால், பால் விற்பனை செய்யமுடியாமல், பால் உற்பத்தியாளர்கள் அவதிக்குள்ளாகினர். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை பால் கொண்டு சென்றவர்களிடம், பால் கொள்முதல் செய்யாததால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், மேட்டுக்குப்பம் பகுதியில் திருவெண்னைய்நல்லூர் - கடலூர் நெடுஞ்சாலையில் பாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற திருவெண்னைய் நல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

ADVERTISEMENT

Tags : Vilupuram
ADVERTISEMENT
ADVERTISEMENT