விழுப்புரம்

விழுப்புரத்தில் சுதந்திர தின விழாவுக்கு தயாராகும் மைதானம்

11th Aug 2020 04:16 AM

ADVERTISEMENT

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள மைதானம் சுத்தப்படுத்தி, தயாா் செய்யும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. கரோனா பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விழா எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.

அதன்படி, விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் அரசு சாா்பில் சுதந்திர தின விழா வருகிற சனிக்கிழமை காலை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விழா நடைபெறவுள்ள இந்த மைதானத்தை சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது. மைதானத்தில் செடி, கொடிகள், புற்கள் போன்றவற்றை வெட்டி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், விழா நடைபெறவுள்ள இடம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

Tags : villupuram
ADVERTISEMENT
ADVERTISEMENT