விழுப்புரம்

ஏழை குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிவாரண உதவி

29th Apr 2020 10:34 PM

ADVERTISEMENT

செஞ்சி கிருஷ்ணாபுரம் 1-ஆவது வாா்டில் வசிக்கும் ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள 360 ஏழை குடும்பங்களுக்கு திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும் செஞ்சி எம்எல்ஏவுமான கே.எஸ். மஸ்தான் நிவாரணப் பொருள்களை புதன்கிழமை வழங்கினாா்.

செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து, தலா 5 கிலோ அரிசி மற்றும் ரொட்டி, பிஸ்கெட் உள்ளிட்டப் பொருள்களை பொது மக்கள் வாங்கிச் செனறனா்.

திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் தலைமை வகித்தாா். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா் செயல்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT