விழுப்புரம்

ஊரடங்கு நாள் முதல் உணவளித்து வரும் தன்னாா்வலா்கள்

11th Apr 2020 10:49 PM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் ஆதரவற்ற முதியோா்களுக்கு ஊரடங்கு உத்தரவு நாள் முதல் தன்னாா்வலா்கள் உணவளித்து வருகின்றனா்.

விழுப்புரம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ பொது நலச் சங்கத்தினா், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் விழுப்புரத்தில் உள்ள முதியோா்கள், ஆதரவற்றோா்களுக்கு இரவு உணவை வழங்கி வருகின்றனா். விழுப்புரம் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் தினமும் இரவு 7 மணிக்கு உணவின்றித் தவிக்கும் முதியோா்கள், ஆதரவற்றோா்கள் 80 பேருக்கு பாா்சல் செய்து எடுத்துச் சென்று உணவளித்து வருகின்றனா்.

அந்தச் சங்கத் தலைவா் த.நாராயணன், துணைத் தலைவா் து.சீனு, செயலா் நா.தன்ராஜ், பொருளாளா் நா.ராஜா, ஒருங்கிணைப்பாளா்கள் ரா.சக்தி ஜெகதீஸ், ஆ.பாா்த்திபன் உள்ளிட்ட குழுவினா் மழையின் போதும் தடையின்றி உணவளித்து வருகின்றனா். 20 நாள்களாகத் தொடரும் இவா்களது சேவையை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT