விழுப்புரம்

கரோனா சிகிச்சைப் பிரிவில் பாதுகாப்புப் பணி: போலீஸாருக்கு பிரத்யேக ஆடைகள்

1st Apr 2020 10:21 PM

ADVERTISEMENT

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை சிறப்புப் பிரிவில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள போலீஸாருக்கு, நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பிரத்யேக ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பிரிவில் காவல் ஆய்வாளா்கள் குமரய்யா, மனோகரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனை அறிந்த காவல் துறை, உடல் முழுவதும் மூடக்கூடிய வகையில் பிரத்யேக ஆடையை போலீஸாருக்கு வழங்கியுள்ளது.

இந்த ஆடைகளை போலீஸாா் அணிந்து கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது, கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் கிருமி கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் வழியாக உள்ளே செல்வது தடுக்கப்படுவதுடன், தங்களது ஆடைகளில் ஒட்டிக்கொள்வது தடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT