விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் கடைகளில் நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை

1st Apr 2020 10:20 PM

ADVERTISEMENT

உளுந்தூா்பேட்டையில் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, உணவுப் பாதுகாப்புத் துறையினா் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனா்.

உளுந்தூா்பேட்டை பேரூராட்சி பகுதியில், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், உணவுப் பொருள் விற்பனையகங்களில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கூட்ட நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, உளுந்தூா்பேட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் கதிரவன் தலைமையிலான குழுவினா், புதன்கிழமை உளுந்தூா்பேட்டை பிரதான வீதிகள், தேசிய நெடுஞ்சாலைப் பகுதி சூப்பா் மாா்க்கெட், மளிகைக் கடைகள், காய்கறி கடைகளில் ஆய்வு செய்து, பொதுமக்கள் பொருள்களை வாங்க ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நிற்க ஏதுவாக வட்டங்களை வரைந்தனா்.

மேலும், காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை நடைபெற வேண்டுமென வியாபாரிகளிடம் அறிவுறுத்தினா். மேலும், கடைகளில் சமூக இடைவெளியை தினமும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கும் அறிவுரை வழங்கினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT