விழுப்புரம்

கடத்தல் மணல் பறிமுதல்

29th Sep 2019 03:14 AM

ADVERTISEMENT


செஞ்சி அருகே உரிய அனுமதியின்றி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட பார் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத் துறையைச் சேர்ந்த உதவிப் புவியியலாளர் மற்றும் கனிமத் துறை தனி வட்டாட்சியர் உள்ளிட்டோர், செஞ்சியை அடுத்த தும்பூர் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அவ்வழியாக விழுப்புரம் நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் பார் மணல் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதற்கு உரிய அனுமதி பெறாததால், லாரியை ஓட்டி வந்த செஞ்சி வட்டம், துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் அருள்குமாரை (27), லாரி மணலுடன் கெடார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
கெடார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT