விழுப்புரம்

வீட்டுமனைப் பட்டா வழங்க இருளர் மக்கள் வலியுறுத்தல்

17th Sep 2019 10:31 AM

ADVERTISEMENT

வானூர் புளிச்சப்பள்ளம் பகுதியில் இருளர்களுக்கு ஒதுக்கிய இடத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து,  புளிச்சப்பள்ளம் பகுதி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தினர், சங்க துணைச் செயலர் க.சிவகாமி தலைமையில்,  திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துக் கூறியதாவது: 
வானூர் வட்டம், புளிச்சப்பள்ளம் கிராமத்தில் பழங்குடி இருளர்கள் 45 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு,  அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையால், கடந்த 1994-ஆம் ஆண்டு 1.85 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.  இதில்,  நிலம் வழங்கியோர் இழப்பீடு குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டதால் தடை ஏற்பட்டது. இதன் பிறகு கடந்த 2003-ஆம் ஆண்டில் அரசுக்கு சார்பாக தீர்ப்பு வந்தது. இருந்தபோதும், அந்த நிலத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. இதையடுத்து, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நீதிமன்றத்திலும் முறையிட்டு, ஆதிதிராவிட நலத் துறை அதிகாரிகளையும்  சந்தித்தனர்.
இதனால், நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் வகையில், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடத்தை அளவீடு செய்து, இருளர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இருந்தும், அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் 
தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT