திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்

சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்த செல்லம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்


சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்த செல்லம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 6-ஆம் தேதி மாலை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இரவு அம்மன் முத்துப் பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 12-ஆம் தேதி அம்மன் திருக்கல்யாணம், அம்மன் திருவீதி உலா, ஊரணிப் பொங்கலிடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை அர்சுணன் மாடு திருப்புதல், காளிக்கோட்டை இடித்தல் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு காலை 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. 

தேரோட்டத்தினை கள்ளக்குறிச்சி அதிமுக ஒன்றிய செயலாளர் அ.ராஜசேகர் தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார். ஊர்மக்கள் பலரும் பங்கேற்றனர். மாலை தீ மிதித்தல் நடைபெற்றது. (16.9.19) திங்கள்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com