விழுப்புரம்

செஞ்சி பேருந்து நிலையத்தில் மழை நீரால் பாதிப்பு

13th Sep 2019 10:07 AM

ADVERTISEMENT

செஞ்சி பேருந்து நிலையத்தில் கழிவு நீர் கலந்து மழை நீர் புகுவதால் பயணிகளும், பேருந்து நிலைய வணிகர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செஞ்சியில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் வழக்கம் போல் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குளம் போல் தேங்கியது. இந்த நீர் கடைகளிலும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எப்போது மழை பெய்தாலும் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்குகிறது.
செஞ்சி காந்தி பஜாரில் இருந்து கூட்டுச் சாலை வரை உள்ள சாலையில் இரு புறமும் உள்ள கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது.
மேலும், செஞ்சி கூட்டுச் சாலையில் உள்ள கால்வாயின் அளவு சிறியதாக உள்ளதால், ஒரே நேரத்தில் காந்தி பஜாரின் மழை நீரையும், திருவண்ணாமலை சாலையில் உள்ள 
கால்வாய் நீரையும் ஒருசேர உள்வாங்கி செல்வதில் பெரும் சிரமமாக உள்ளது.   இதன் காரணமாக செஞ்சி காந்தி பஜார் மழைநீர், கழிவு நீருடன் கலந்து பேருந்து நிலையத்தில் புகுந்து விடுகிறது. திருவண்ணாமலை சாலையில் உள்ள தண்ணீர் வற்றிய பிறகே காந்தி பஜார் தண்ணீர் வடியத் தொடங்கும். செஞ்சி கூட்டுச் சாலையில் காந்தி பஜார் கால்வாயும், திருவண்ணாமலை சாலை கால்வாயும் சந்திக்கும் கால்வாயை அகலப்படுத்துவதைத் தவிர தீர்வு ஏதும் இல்லை. 
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT