விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை அருகே சூறைக்காற்றில் புளிய மரம்  சாய்ந்ததில் 3 வீடுகள் சேதம்

13th Sep 2019 10:10 AM

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை அருகே வியாழக்கிழமை மாலையில் வீசிய சூறைக்காற்றில் பழைமையான புளியமரம் சாய்ந்ததில், 3 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. மேலும், 10 ஆடுகளும் உயிரிழந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை திடீரென சூறைக்காற்று வீசியது. இதில், உளுந்தூர்பேட்டை அருகே கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஊமத்துரையின் (48) வீட்டின் அருகே இருந்த பழைமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது.
இதனால், மரத்தின் அடியில் சிக்கி அருகேயிருந்த வெங்கடேசனின் குடும்பத்தினர் வசித்து வந்த 3 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. மேலும், 10 ஆடுகளும் உயிரிழந்தன. தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர். பின்னர், வீட்டின் மேல் விழுந்து கிடந்த மரத்தை 
அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT