விழுப்புரம்

இரு சாலை விபத்துகளில் இருவர் பலி

10th Sep 2019 10:14 AM

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை அருகே நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜவேல் (28). ஜே.சி.பி. ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற இவர் மீது,  சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ராஜவேல் உயிரிழந்தார். உளுந்தூர்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு விபத்து: இதுபோல, பாதூர் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் நின்றிருந்த புதுச்சேரியைச் சேர்ந்த செந்தாமரை(70) என்பவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து திருவெண்ணெய் நல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT