விழுப்புரம்

திண்டிவனம் பகுதியில் கல்லூரி மாணவிகள் இருவர் தற்கொலை

7th Sep 2019 08:47 AM

ADVERTISEMENT

திண்டிவனம் பகுதியில் இரு வேறு இடங்களில், கல்லூரி மாணவிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் மகள் லாவண்யா (19). சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 
கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இவர், வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை திண்டிவனம் போலீஸார் உடல் கூறு ஆய்வுக்காக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மற்றொரு சம்பவம்: திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணகிரி மகள் மாலதி (20), திண்டிவனம் அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், வெள்ளிக்கிழமை காலை வீட்டில், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாராம். பலத்த காயமடைந்த மாலதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை ரோஷணை போலீஸார் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT