விழுப்புரம்

23 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

4th Sep 2019 10:03 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் 23 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சின்னசேலம் தனி வட்டாட்சியர் டி.ராஜராஜன் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நிலம் கையக தனி வட்டாட்சியராகவும்,  திண்டிவனம் முத்திரைத்தாள் தனி வட்டாட்சியர் ஆர்.சுப்புராயன் விழுப்புரம் அகதிகள் முகாம் தனி வட்டாட்சியராகவும், சங்கராபுரம் தனி வட்டாட்சியர் கே.பன்னீர்செல்வம் விழுப்புரம் ஆட்சியரக ஆர்பிட்ரேஷன் தனி வட்டாட்சியராகவும், அகதிகள் முகாம் தனி வட்டாட்சியர் சுந்தரராஜன் மரக்காணம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், விழுப்புரம் வட்டாட்சியர் பிரபுவெங்கடேஸ்வரன் திண்டிவனம் ரயில்வே நிலம் கையக தனி வட்டாட்சியராகவும், விழுப்புரம் நத்தம் 
நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் எஸ்.செந்தில் மரக்காணம் நிலம் கையக தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
இதே போல, மரக்காணம் வட்டாட்சியர் எஸ்.தனலட்சுமி திண்டிவனம் முத்திரைத்தாள் தனி வட்டாட்சியராகவும்,  கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் தயாளன் விழுப்புரம் நிலம் கையக தனி வட்டாட்சியராகவும்,  திண்டிவனம் ரயில்வே நிலம் கையக தனி வட்டாட்சியர் ஆதிசக்தி சிவகுமரிமன்னன் விழுப்புரம் நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகவும்,  விழுப்புரம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஆனந்தன், மரக்காணம் தனி வட்டாட்சியராகவும், விழுப்புரம் டாஸ்மாக் நிறுவன தனி வட்டாட்சியர் எஸ்.கணேஷ் விழுப்புரம் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   இந்த வகையில்,  23 வட்டாட்சியர்கள் மாவட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
இதே போல, வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளர் நிலையில் உள்ள 11 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டு, மாறுதல் வழங்கி துணை வட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் சனிக்கிழமை பிறப்பித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT