விழுப்புரம்

முகையூரில் அரசு மகளிர்  கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

4th Sep 2019 10:02 AM

ADVERTISEMENT

முகையூரில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் முகையூர் ஒன்றியத்தின் 3-ஆவது மாநாடு திருக்கோவிலூர் அருகேயுள்ள அரகண்டநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் டில்லி தலைமை வகித்தார். சங்கக் கொடியை செல்வி ஏற்றி வைத்தார். இந்திய வழக்குரைஞர் சங்க மாவட்டச் செயலர் முருகன் மாநாட்டைத் தொடக்கி வைத்தார். வேலை அறிக்கையை ஒன்றியச் செயலர் மேரி சமர்ப்பித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கலியபெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க வட்டச் செயலர் செல்வராஜி, ஒன்றிய துணைச் செயலர் ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
     சம்மேளனத்தின் வட்டச் செயலர் வளர்மதி சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மாநிலச் செயலர் அமுதா நிறைவேற்றினார். மாநாட்டில் ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    முகையூரில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், முகையூர் ஒன்றியப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், விளந்தை, முகையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைக்க வேண்டும், அரகண்டநல்லூர் தொழுநோய் மருத்துவமனையை சீரமைத்து குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவமனையாக மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT