விழுப்புரம்

மதுப் புட்டிகள் கடத்தல்:  இளைஞர் கைது

4th Sep 2019 10:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள், சாராயம் கடத்தி வந்த இளைஞர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மது விலக்கு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி உத்தரவின் பேரில், உதவி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் விழுப்புரம் அருகேயுள்ள பாக்கம் கூட்டுச் சாலை என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 480 புதுச்சேரி மதுப் புட்டிகள் மற்றும் 200 லிட்டர் எரி சாராயம் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம்.
இந்த மதுப்புட்டிகளை பாக்கம் காலனியைச் சேர்ந்த வாழமணி மகன் ஸ்டீபன்(26) விழுப்புரத்துக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. மதுப்புட்டிகள், சாராயம், வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, விழுப்புரம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. மது விலக்கு போலீஸார் ஸ்டீபனை கைது செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT