விழுப்புரம்

பெண் கிராம உதவியாளரிடம் நகை பறிப்பு

4th Sep 2019 10:01 AM

ADVERTISEMENT

திண்டிவனம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் கிராம உதவியாளரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனர்.
திண்டிவனம் அருகே சஞ்சீவிராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு மனைவி அமுதா(38). திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை அருகேயுள்ள கிராண்டிபுரத்தில் கிராம உதவியாளராகப் பணிபுரிகிறார்.செவ்வாய்க்கிழமை காலை அமுதா இரு சக்கர வாகனத்தில் கிராண்டிபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஊரல் கிராமத்தில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் பின்னால் வந்த இருவர், அமுதா அணிந்திருந்த சுமார் 5 பவுன் சங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். இந்த சம்பவத்தில் அமுதா இரு சக்கர வாகனத்தில் இருந்து, நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அமுதாவை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது குறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸார் விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT