விழுப்புரம்

பழங்குடி இருளர்கள் மீது பொய் வழக்கு: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

4th Sep 2019 10:01 AM

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டையில் பழங்குடி இருளர்களைக் கைது செய்து, போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து பேராசிரியர் பிரபா கல்விமணி, பி.வி.ரமேஷ் தலைமையில் பாதிக்கப்பட்ட இருளர் குடும்ப உறவினர்கள் தரப்பினர் விழுப்புரம் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்துக் கூறியதாவது:  
உளுந்தூர்பேட்டை அருகே பூசாரிப்பாளையத்தைச் சேர்ந்த ரவி மகன் பாபு(22),  உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பைச் சேர்ந்த வேலு (45),  ராமு(30),  வேலு (29) ,  காட்டுநெமிலியில் தங்கி வேலை செய்துவரும் விஜயகுமார்(30),  சங்கர்(27) , மணிகண்டன்(35)  ஆகியோரை போலீஸார் அண்மையில் கடத்திச் சென்று, எலவனாசூர்கோட்டை காவலர் குடியிருப்பில் வைத்து கடுமையாக தாக்கி விசாரித்துள்ளனர். 
இவர்கள் 7 பேரையும் திருநாவலூர் அருகே அயன்வேலூர் திரௌபதியம்மன் கோயில் திருட்டு, எலவனாசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருட்டு ஆகிய சம்பவங்கள் தொடர்பாக பொய் வழக்கு பதிவு செய்து, ஆக. 28ஆம் தேதி கைது செய்து,  சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து,  காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  இதே போல, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார்,  சித்தலிங்கம் மடத்தைச் சேர்ந்த மணி, ராஜா, சுப்பிரமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.  இவர்களையும், பொய் வழக்குகளில் இருந்து பாதுகாத்து,  நீதி கிடைக்க உதவவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT