விழுப்புரம்

தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

4th Sep 2019 10:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தை அடுத்த வாதானூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (34), கூலித் தொழிலாளி. இவர் கடந்த வியாழக்கிழமை வீட்டைப் பூட்டி உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்தினருடன் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைந்து கிடந்ததுடன், வீட்டில் இருந்த பொருள்கள், துணிகள் சிதறிக் கிடந்தன. அறைக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகைகள் திருடுபோயிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸார் பழனிச்சாமியின் வீட்டுக்கு வந்து, பார்வையிட்டு விசாரித்தனர். தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT