விழுப்புரம்

தமிழ்ச் சங்கம் சார்பில் மூவர் பிறந்த நாள் விழா

4th Sep 2019 10:01 AM

ADVERTISEMENT

தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில் திரு.வி.க, ப.ஜீவானந்தம், அன்னை தெரசா ஆகிய மூவர் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தியாகதுருகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு தனியார் தொழிற் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் 
த.பழனிவேல் தலைமை வகித்தார். சங்கராபுரம் ஸ்டார் சங்க மாவட்டத் தலைவர் அ.முகமத் ரஃபி, கல்லைத் தமிழ்ச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் வே.வெங்கட்ராமன், சங்கை தமிழ்ச் சங்கத் தலைவர் ம.சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் வரவேற்றார்.
"குறுந்தொகையில் இலக்கிய நயம்' என்ற தலைப்பில் நெடுமானூர் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.கதிர்வேல், "திருவிகவின் தமிழ்ப்பணி' என்ற தலைப்பில் 
சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், "ஜீவானந்தம் பொது உடைமை ஒரு பார்வை' என்ற தலைப்பில் குடியநல்லூர் இரா.செல்வராஜ், "வேதாந்திரி மகரிஷி வாழ்க்கை வரலாறு' என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயம்.ரவி, "அன்னை தெரசாவின் சமூகத் தொண்டு' என்ற தலைப்பில் ஏ.கே.டி கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் ம.பர்வதஅரசி ஆகியோர் பேசினர். 
மக்கட்பேறு என்ற திருக்குறள் அதிகாரத்துக்கு முத்தமிழ் முத்தன், சி.சிவப்பிரகாசம் விளக்கவுரையாற்றினார். 
பேச்சுப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற சங்கராபுரம் அரசு பள்ளி மாணவிகள் நால்வருக்கு தியாகதுருகம் முன்னாள் பேருராட்சி மன்றத் தலைவர் பொன்.இராமகிருஷ்ணன், புதுச்சேரி பாவலர்  சண்முகசுந்தரம் பரிசுகளை வழங்கினர். சங்கப் பொருளர் தி.கி.சண்முகம் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT