விழுப்புரம்

செஞ்சி பேருந்து நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு

4th Sep 2019 10:03 AM

ADVERTISEMENT

செஞ்சி பேருந்து நிலையத்தில் கழிப்பறை கழிவு வழிந்தோடுவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
செஞ்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பேருந்து நிலையத்துக்குள் மேற்கு புறம் கட்டண கழிப்பறை உள்ளது. இங்கு ஆண்கள் கழிப்பறையில் உள்ள குழாய் உடைந்து, சிறுநீருடன் கழிவுகள் வெளியேறி, பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ளது. 
இதனருகில், தாய்மார்கள் பாலூட்டும், அறை, பயணிகள் நிழல்குடை ஆகியவை உள்ளன. தேங்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. மேலும், பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.
எனவே, பேருந்து நிலைய வளாகத்தில் சுகாதாரத்தைப் பேண செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT