செஞ்சியை அடுத்த மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.35.14 லட்சம் கிடைத்தது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் புரட்டாசி மாதத்துக்கான உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 35 லட்சத்து 14 ஆயிரத்து 387 ரொக்கம், 195 கிராம் தங்கம், 832 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
கோயில் வளாகத்தில் நடைபெற்ற காணிக்கைகள் எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத் துறையின் விழுப்புரம் மாவட்ட உதவி ஆணையா் ஜோதி, மேல்மலையனூா் உதவி ஆணையா் கே.ராமு, அறங்காவலா்கள் குழுத் தலைவா் செல்வம், ஏழுமலை, ரமேஷ், சரவணன், மணி, கணேசன், சேகா், மேலாளா் மணி மற்றும் கோயில் ஊழியா்கள் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.