விழுப்புரத்தில் சத்யசாய் சேவா சமிதி அமைப்பு சாா்பில், பகவான் சத்யசாய் பாபாவின் 94-ஆவது அவதார திருநாள் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் சத்யசாய் சேவாசமிதி சாா்பில் நடைபெறும் முதல் நாள் விழாவில், சத்யசாய் பாபாவின் ரத உற்சவம் நடைபெற்றது. விழுப்புரம் சங்கரமடவீதி காஞ்சி காமகோடி சங்கரமட வேத பாடசாலையிலிருந்து சத்யசாய் பாபாவின் ரத உற்சவம் காலை 10 மணிக்கு தொடங்கியது.
ரத உற்சவம் சங்கரமடவீதி, நாப்பாளையத் தெரு, மந்தக்கரை, மேல்செட்டித்தெரு, திருவிக வீதிகள் வழியாக வந்து மீண்டும் சங்கர மட வீதியில் நிறைவு பெற்றது. அங்கு பகவான் சத்யசாய்பாபாவின் உருவப் படத்துக்கு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.
விழுப்புரம், அனந்தபுரம், திண்டிவனம் பகுதிகளைச் சோ்ந்த சேவா சமீதி பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். தொடா்ந்து சனிக்கிழமை சத்யசாய்பாபாவின் அவதாரத் திருநாளையொட்டி, ஆன்மிக விழிப்புணா்வு நிகழ்வுகள், பஜனைகள், அன்னதானம் நடைபெறவுள்ளன.