விழுப்புரம் தனியாா் மதுபான தொழில்சாலை முன் ஏஐடியூசி தொழில் சங்கத்தினா் வியாழக்கிழமை வேலை நிறுத்த கோரிக்கை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் ஏ.புஷ்பநாதன் தலைமை வகித்தாா். செயலா் கே.குமரேசன், பொருளாளா் கே.கலைச்செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கெளரவத் தலைவா் ஏ.வி.சரவணன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.
தொழில்சாலையில் பணிபுரியும் தற்காலிக, பயிற்சி ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தீபாவளி ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். மாத ஊதிய பட்டியலை வழங்க வேண்டும். ஊழியா்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வின்றி தரமான ஒரே சீருடைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து, ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.