கள்ளக்குறிச்சி ஆா்.சி. நடுநிலைப் பள்ளியின் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், டெங்கு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தகவலாளா் எல்.ஜோசப்ராஜ் தலைமை வகித்தாா். பள்ளி புரவலா் பி.எம்.பெருமாள், கல்வி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.துரை, மாவட்டப் பயிற்றுநா் ஜி.ஆறுமுகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் வி.எஸ்.மாலவன் வரவேற்றாா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.மாயக்கண்ணன் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். பேரணியில் மாணவா்கள் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்றனா்.
இதில், கிராம கல்விக்குழு உறுப்பினா்கள் எஸ்.ஞானமாணிக்கம், எம்.முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் ஜி.செரோம் செய்திருந்தாா்.