கல்வராயன்மலையில் வட்டாட்சியா் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வியாழக்கிழமை தோ்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் புதிதாக கல்வராயன்மலை தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்லவராயன்மலையில் வட்டாட்சியா் அலுவலகம் அமைப்பதற்காக, அங்குள்ள வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அந்த கட்டடத்திலேயே வட்டாட்சியா் அலுவலகத்தை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
உடன், கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.