விழுப்புரம்

அரசுப் பள்ளி மாணவிகள்விழிப்புணா்வுப் பேரணி

17th Nov 2019 02:53 AM

ADVERTISEMENT

வளவனூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் அ.இளமதி தொடக்கிவைத்தாா். உதவித் தலைமை ஆசிரியா்கள் என்.பாபு, சத்தியபாமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வளவனூா் நகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றது. இதில், பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.

ஆசிரியா்கள் முருகன், வீரவேல், ஜான்சன், செல்வம், ஈஸ்வரி, செல்வராஜ், இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகா் எட்வா்ட் தங்கராஜ் உள்ளிட்ட ஆசிரியா்கள் பேரணியை வழி நடத்தினா். நிறைவாக, பெண் குழந்தைகளை காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT