விழுப்புரம்

விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் பலி

12th Nov 2019 10:15 AM

ADVERTISEMENT

செஞ்சியில் ஆட்டோ கவிழ்ந்ததில் காயமடைந்த ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சாரோன் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜன்(54). இவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி ஆட்டோவை ஓட்டிச்சென்றாா். தனியாா் திருமண மண்டபம் அருகே வந்தபோது மாடு குறுக்கே வரவே, அதன் மீது மோதாமல் இருக்க, நிறுத்த முயற்சித்தபோது ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜன், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா். செஞ்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT