விழுப்புரம்

மயானம் ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் புகாா்

12th Nov 2019 08:06 AM

ADVERTISEMENT

உளுந்தூா்பேட்டை அருகே மயானத்தை ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், களமருதூா் அருகே கொரட்டங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மக்கள் திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியா் அலுவலக வாராந்திர குறைதீா் கூட்டத்தில், புகாா் மனு அளித்துக் கூறியதாவது: கொரட்டங்குறிச்சியில் 100 குடும்பத்தினா் வசிக்கிறோம். நாங்கள் அருகே சேஷ நதிக்கரையோரத்தில் உள்ள மயானப் பகுதியை காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம். அந்த மயானப் பகுதியை தற்போது சிலா் ஆக்கிரமித்துள்ளனா். அவா்கள், இறுதிச் சடங்கு செய்ய செல்பவா்களிடம் தகராறு செய்து தடுத்து வருகின்றனா்.

மயானப்பகுதிக்கு சென்ற வழியையும் ஆக்கிரமித்து தடை செய்துவிட்டனா். இதனால், வரும் காலங்களில் இறுதி சடங்கு செய்ய வழியின்றி உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இதுகுறித்து உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT