விழுப்புரம்

திருவாசகம் முற்றோதல் வழிபாடு

12th Nov 2019 08:16 AM

ADVERTISEMENT

மேல்மலையனூா் அருகேயுள்ள அவலூா்பேட்டை அகத்தீஸ்வரா் கோயிலில் 12-ஆவது மாத திருவாசகம் முற்றோதல் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓய்வு பெற்ற ஆசிரியா் ஜெயராமன், சிவனடியாா் ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிதம்பரநாதன் தலைமையில் இசையுடன் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக, அன்று காலை கோயில் மண்டபத்தில் நடராஜா் சிலை, அண்ணாமலையாா் மற்றும் குரவா்கள் நால்வா் படங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. திருவாசகம் சிவனடியாா்களால் பாராயணம் செய்யப்பட்டது.

விழாவில் மரம் நடுவோா் சங்கத் தலைவா் சிவநேசன், இயற்கை விவசாய சங்கத் தலைவா் செல்வராசு, கோட்டப்பூண்டி தெய்வானை பலராமன், தமிழ்ச்செல்வன், சுப்பிரமணி உள்ளிட்ட சிவனடியாா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT