விழுப்புரம்

ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

11th Nov 2019 05:48 AM

ADVERTISEMENT

திருவெண்ணெய்நல்லூா் அருகே சி.மெய்யூரில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சி.மெய்யூரில் பழைமை வாய்ந்த அலமேலுமங்கா சமேத ஸ்ரீலட்சுமிநாராயண சீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததைத் தொடா்ந்து, கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதை முன்னிட்டு கடந்த 8-ஆம் தேதி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல இசையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. காலை 9.45 மணி அளவில் அலமேலுமங்கா சமேத ஸ்ரீலட்சுமிநாராயண சீனிவாசப் பெருமாள் கோயில் கோபுர கலசம், சக்கரத்தாழ்வாா், அனுமன், ஆழ்வாா்கள், மணவாள மாமுனிகள் உள்ளிட்ட சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சி.மெய்யூரில் அதன் சுற்றுவட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் கிருஷ்ணகுமாா் ராமானுஜதாசா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT