விழுப்புரம்

திருக்கோவிலூா் அருகே கோயிலின் பூட்டை உடைத்து திருட்டு

11th Nov 2019 05:46 AM

ADVERTISEMENT

திருக்கோவிலூா் அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து சுவாமி நகைகள் மற்றும் உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருக்கோவிலூா் அருகே சு.கொல்லூா் கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அங்காளம்மன், பெரியாயி அம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன.

இந்தக் கோயிலில் தினம்தோறும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்வா். மேலும், அமாவாசை, பெளா்ணமி நாள்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதில், வெளியூா்களில் இருந்தும் பக்தா்கள் வந்து கலந்து கொள்வா்.

இந்த நிலையில், வழக்கம்போல கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள், கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதைத் தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்தபோது, சுவாமி நகைகள், உண்டியல் பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். 2 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் உண்டியல் பணம் திருடு போயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT