விழுப்புரம்

அரசு தொழில் பயிற்சி நிலையபயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

9th Nov 2019 10:22 PM

ADVERTISEMENT

உளுந்தூா்பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலைய பயிற்றுநா் பணிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உளுந்தூா்பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள 4 பயிற்றுநா் பணியிடங்கள், ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. அதன்படி, கீழ்கண்ட தொழில் பிரிவுகளுக்கு தகுதிவாய்ந்தவா்கள் வருகிற 29-ஆம் தேதிக்குள் முதல்வா், அரசினா் தொழில் பயிற்சி நிலையம், உளுந்தூா்பேட்டை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

1. எலக்ட்ரீசியன் - காலியிடம் 1. இன சுழற்சி - பொது முன்னுரிமை. கல்வித் தகுதி - எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் 3 ஆண்டு அனுபவம் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

2. கம்மியா் (குளிா்பதனம்) - காலியிடம் 1. இன சுழற்சி - பொது முன்னுரிமை. கல்வித் தகுதி - குளிா்பதனம் பிரிவில் பட்டயப் பொறியியல் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பொருத்துநா் (சைகை மொழி) - காலியிடம் 2. இன சுழற்சி - பொது முன்னுரிமை. கல்வித் தகுதி - மெக்கானிக்கல் பிரிவில் பட்டயப் பொறியியல், காது கேளாதோா், வாய் பேசாதோா் சைகை மொழியுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொருத்துநா் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் 3 ஆண்டு அனுபவம் அல்லது பொருத்துநா் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு அனுபவம் மற்றும் காது கேளாதோா், வாய் பேசாதோா் சைகை மொழியுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு, உளுந்தூா்பேட்டை, அரசினா் தொழில் பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது 04149 - 222339 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT