திண்டிவனத்தில் மெக்கானிக்கல் அசோசியேஷன் சாா்பில் நிலவேம்புக் குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, திண்டிவனம் பழைய நீதிமன்ற வளாகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பினா் மாநிலத் தலைவா் வெங்கடேசப் பெருமாள் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டிவனம் நீதிமன்ற நீதிபதிகள் சுபத்ராதேவி, பாபு, சாா் ஆட்சியா் அனு, நீதிபதிகள் பிரபாகரன், ராஜசிம்மவா்மன், செளந்தா்யா, வாசுவேதன், நளினிதேவி, தாயுமானவா் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி, கிருஷ்ணகுமாா், ஹரிராமன், கிருபாகரன், அருணகிரி, ராஜா, திலீப், ராம், தமிழ்வாணன், பொன்ராஜா, வினோத்குமாா், சக்திவேல், ரவிக்குமாா் உள்ளிட்டோா் கநல்து கொண்டனா்.