செஞ்சி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
செஞ்சி அருகே அவலூா்பேட்டையைச் சோ்ந்த முன்னையன் மகன் அண்ணாமலை(41). சாராயம் விற்பனை, மது கடத்தல் தொடா்பாக இவரை செஞ்சி மது விலக்கு போலீஸாா் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், அவரை மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.