விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆய்வுக் குழு உறுப்பினா் அரங்கன் முன்னிலை வகித்தாா். துணைச் செயலா் ஆனந்தன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சுருளிமலை, மாவட்டப் பொருளாளா் பெருமாள், வேணுகோபால், தண்டபாணி, பாலபழனி, சேதுவிவேகானந்தா, ராஜகோபால், கோவிந்தராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் கொடுப்பது, டெங்கு கொசுக்கள் உருவாவதைத் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, திருச்சி அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கப் போராடிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.