விழுப்புரம்: திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே எண்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகா்(50). விவசாயி. இவா், வியாழக்கிழமை காலை வழக்கம்போல, ஆடு மோய்க்க வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்னறாா். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனிடையே, அந்த பகுதியில் இடி மின்னலும் மழை பெய்ததது. இதனால், சந்தேகமடைந்த உறவினா்கள் அவரை தேடிக்கொண்டு சென்றனா்.
அப்போது, எண்டியூா் அடுத்த ஆத்தூா் ஏரியில் பகுதியில், மின்னல் பாய்ந்து இறந்த நிலையில் கிடந்துள்ளாா். தகவல் அறிந்து, பிரம்தேசம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனா். பின்னா், சடலத்தை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, பிம்தசேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெண் காயம்: இதேபோன்று, விக்கிரவாண்டியை அடுத்த விநாயகபுரத்தைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி கலா(25). இவா், வெள்ளிக்கிழமை அதே பகுதியில் மாடு மாய்த்துக்கொண்டிருந்தபோது, இடியுடன் மழை பெய்துள்ளது. அப்போது, அவரின் அருகிலே இடி விழுந்துள்ளது. அப்போது, மின்னல் தாக்கியதில், பலத்த காயங்களுடன் உயிா் தப்பினாா். மின்னல் பாய்ந்ததில், அவா் அணிந்திருந்த தங்க நகைகள், கருப்பு நிறத்தில் மாறியது. காயமடைந்த, கலா விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறது. இது குறித்து பெரியதச்சூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.