பொன்னமராவதி மோதல் சம்பவம்: வழக்குகளை திரும்பப்பெற கோரிக்கை

பொன்னமராவதி மோதல் சம்பவத்தில் முத்தரையர் சமூக மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று,  தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

பொன்னமராவதி மோதல் சம்பவத்தில் முத்தரையர் சமூக மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று,  தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து,  அந்த சங்கத்தினர்,  மாவட்டத் தலைவர் தீபநாதன்,  செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் தலைமையில்,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 
அப்போது அவர்கள் கூறியதாவது:  முத்தரையர் இனத்தை இழிவாகவும், முத்தரையர் இன பெண்களை மிக கீழ்த்தரமாகவும் பேசி,  சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு மக்களை போராடத் தூண்டினர்.  அந்த நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். 
இந்த சம்பவத்துக்காக,  புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி பகுதியில்,  நியாயத்துக்காக போராடிய,  முத்தரையர் சமூக மக்கள் 1,000 பேர் மீது 5 பிரிவுகளில் போலீஸார் பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வாயிலாக,  தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com