குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கிராம மக்கள் கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள கோவுலாபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி,  அந்தப் பகுதி மக்கள்

திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள கோவுலாபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி,  அந்தப் பகுதி மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 
இதுகுறித்து சரவணப்பாக்கம் ஊராட்சி,  கோவுலாபுரம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்துக் கூறியதாவது:
250 குடும்பத்தினர் வசிக்கும் கோவுலாபுரம் கிராமத்தில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இதற்காக, அருகே உள்ள வாண்டையான்குளம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத்துக்கு குடிநீர் விநியோகம் நடந்து வந்தது.  
வறட்சியால், அந்த ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வற்றிப் போனதால், அதற்கு மாற்றாக, அருகே ஊராட்சி சேவை மைய வளாகத்தில் இருந்த பழைய ஆழ்துளை கிணறு மூலம் மோட்டார் வைத்து, தற்போது தண்ணீர் ஏற்றப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்த ஆழ்துளை கிணற்றிலும் நீர் மட்டம் குறைந்து போனதால், தண்ணீர் விட்டு, விட்டு இறைக்கிறது. இதனால், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் முழுமையாக நிரம்பாமல், பொது மக்களுக்கு போதிய குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. கடந்த ஒரு மாத காலமாக இந்த குடிநீர் பிரச்னை தொடர்ந்து 
வருகிறது.
இருந்த போதும்,  இந்த ஆழ்துளை கிணற்று நீர் குழம்பிய நிலையில் வருவதால், குடிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை. இதனால், தோல் நோய்கள் வரும் நிலை உள்ளது. 
அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான திறந்தவெளி கிணற்றில், குப்பை கொட்டி வைத்து, சாக்கடை நீர்  தேங்கி இருப்பதால்,  அந்த நீர் இதில் கலப்பதாக சந்தேகம் எழுகிறது.  இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கையில்லை.
இதனால்,  அருகே உள்ள கோழிப்பண்ணை பகுதியில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து அதிலிருந்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்ய,  மாவட்ட ஆட்சியர் 
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com