உயிரிழந்த இரு காவலர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் உயிரிழந்த இரு காவலர்களின் குடும்பங்களுக்கு காவல்

விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் உயிரிழந்த இரு காவலர்களின் குடும்பங்களுக்கு காவல் துறையினரின் பங்களிப்பின் மூலமாக திரட்டப்பட்ட நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியைச் சேர்ந்த  ஆயுதப்படை காவலர் கண்ணன், முதுகு தண்டுவட வலி தாங்க முடியாமல் கடந்த மார்ச் 3-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் காவல் நிலைய காவலர் வீரப்பன் சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி கடந்த ஏப். 11-ஆம் தேதி உயிரிழந்தார். உயிரிழந்த இரு காவலர்களின் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் அனைவரும் இணைந்து உதவுவதென முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் ஊதியத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் அனைத்து காவல்துறையினர்  மற்றும் காவல் துறை அமைச்சுப்பணியாளர்கள் ஊதியத்திலிருந்து அந்த தொகை பிடித்தம் செய்யப்பட்டது. இதன் மூலமாக ரூ.14 லட்சத்து 42 ஆயிரம் திரட்டப்பட்டது. இதன்பிறகு, அந்த இரு குடும்பங்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. 
இதன்படி, உயிரிழந்த கண்ணன் மனைவி பொன்மணி, வீரப்பன் மனைவி சத்யா ஆகியோரிடம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தலா ரூ. 7லட்சத்து 21 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் வழங்கினார். 
அப்போது, மது விலக்குப் பிரிவு கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகிலன், விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com