செஞ்சியில் திங்கள்கிழமை மாலை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
செஞ்சியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மேகங்கள் திரண்டு பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
செஞ்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.