விழுப்புரம்

திருநங்கை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

29th Jul 2019 10:10 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அய்யங்கோயில்பட்டு பகுதியைச் சேர்ந்த திருநங்கை அபிராமி (35). இவர், விழுப்புரம் புறவழிச் சாலையில் கடந்த 17-ஆம் தேதி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து விழுப்புரம் டி.எஸ்.பி. திருமால் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முன்விரோதம் காரணமாக அபிராமியை அவரது தோழிகளாக இருந்த திருநங்கைகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் விழுப்புரத்தைச் சேர்ந்த திருநங்கைகள் புனிதா, கயல்விழி, மதுமதி மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வீரபாண்டி, சகாயம், இம்தியாஸ் ஆகியோரை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த விழுப்புரம் அருகே ஆயந்தூரைச் சேர்ந்த ஆமோஸை (19) போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT