விழுப்புரம்

சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

29th Jul 2019 10:06 AM

ADVERTISEMENT

விழுப்புரம் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, அவற்றைப் பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் நகரில் அதிக வாகன போக்குவரத்து நிறைந்த திருச்சி - சென்னை சாலை, புதுச்சேரி சாலை உள்ளிட்ட சாலைப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் மந்தையாக சுற்றித்திரிகின்றன. இவை திடீரென சாலைகளை கடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
விழுப்புரம் நகரில் இதுபோன்று முறையாக பராமரிக்கப்படாமல் சாலைகளில் விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி சார்பில் ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால், மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவது வாடிக்கையாகி வருகிறது.
எனவே, இவற்றைப் பிடித்து அப்புறப்படுத்த விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
"நடவடிக்கை எடுக்கப்படும்': இதுகுறித்து விழுப்புரம் நகராட்சி ஆணையாளர் லட்சுமியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: விழுப்புரத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT