விழுப்புரம்

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரௌடி கைது

29th Jul 2019 10:09 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தைச் சேர்ந்த ரௌடியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை சண்முகாபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் லோகநாதன் (30) . ரௌடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. லோகநாதன் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்தாராம். இது தொடர்பாக, சங்கராபுரம் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், லோகநாதன் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், லோகநாதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லோகநாதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT