விழுப்புரம்

இளைஞர் மீது தாக்குதல்: 4 பேர் கைது

29th Jul 2019 10:06 AM

ADVERTISEMENT

வானூர் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, இளைஞரைத் தாக்கியது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி உழவர்கரை பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் சந்துரு (20). இவரது பிறந்த நாள் விழா விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பூத்துறை பகுதியில் உள்ள முந்திரிக் காட்டில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில்  நண்பர்களான விழுப்புரம் அருகே பள்ளிபுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அழகானந்தம் மகன் ஹரேஷ் (20), புதுச்சேரி உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன் விஜய் (எ) ராமு, திலாசுபேட்டையைச் சேர்ந்த அருணகிரிநாதன் மகன் கிஷோர் (22), முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் கண்ணன் (20), முத்துசாமி மகன் சாந்தகுமார் (20), புதுவையைச் சேர்ந்த ஷரிஷ் (19) ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, மது போதையில் ஹரேஷுக்கும், மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இந்தத் தகராறில் ஹரேஷை சந்துரு, விஜய், கிஷோர், கண்ணன் உள்ளிட்டோர் ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ஹரேஷ், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, சந்துரு உள்ளிட்ட 6 பேர் மீது வானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சந்துரு, கிஷோர், கண்ணன், சாந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT